Pages

Friday 19 December 2014

vivekananthar book review

விவேகானந்தர் – இந்திய மறுமலர்ச்சி நாயகன் : நூல் விமர்சனம்

“நூறு இளைஞர்களை தாருங்கள் , இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் “ என சொன்ன அறத்துறவி “விவேகானந்தர்  “ பற்றிய தொகுப்புகள்தான் இந்த நூல்.

ஆசிரியர் :

 நூலின் ஆசிரியர் பலரும் அறிந்த ரஞ்சனி நாராயணன் அவர்கள். இவரின் முதல் நூல் இது . வலைதளங்களிலும் , பத்திரிக்கைகளிலும் எழுதிவரும் அருமையான எழுத்தாளர் .

நூலை பற்றி :

 பாரதியாரின் வார்த்தைகளுடன் இந்த நூல் துவங்குகிறது. விவேகானந்தர் பிறந்த நாள் முதல் அவர் எப்பொழுது ராமகிருஷ்ணரை சந்தித்தார் , அவரிடம் எப்படி சீடனாக சேர்ந்தார் , அதானால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்ன , ராமகிருஷ்னா மிஷன் எப்போது , எப்படி துவங்கபட்டது என முதல் 43  பக்கங்கள் ஓடிவிடுகிறது .பின்னர் அவரின் சுற்றுபயணங்கள் பற்றிய விவரங்கள் வருகிறது. பயண கட்டுரைகள் எப்போதும் போர் அடிக்கும் ஆனால் இங்கு இடையிடையே நமக்கு அதிகம் தெரியாத சில தகவல்கள் வருவதால் போரடிக்கவில்லை .

 உதாரணம் :

சுவாமிஜியின் முதல் சீடர் பெயர் “சரத் சந்திர குப்தர் “

பவஹாரி என்றால் காற்றை சாப்பிடுபவர் என அர்த்தம் .

சிக்காகோவில் பயணத்தில் சுவாமிஜி தங்க உதவியவர் மிஸ் கேத்ரின் ஆப்ட் சேன்பான் .

பட்டினியில் கிடக்கும் ஒருவனிடம் மதத்தை பற்றி பேசுவது அவனை அவமதிப்பது போல – சுவாமிஜி

நல்லவர்களை எதிர்க்க கண்டிப்பா நாட்டில் நாலுபேராவது இருப்பாங்க , அதுபோல சுவாமிஜியை எதிர்த்து “வங்கவாஸி “ என்ற பத்திரிகை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தது .

அவரின் வாழ்கையை பத்து அத்தியாயங்களாக பிரித்து எழுதியுள்ளார். இந்த வருடம் அவரின் 151 வது வருடம்.

 “அனைத்துப் பரிமாணத்திலும் மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியே விவேகானந்தரின் செய்தி “ என்ற ரவீந்தரநாத் தாகூரின் வரிகளுடன் நூல் முடிகிறது .

சிறப்புகள் :

மறைந்த நபர்களை பற்றி எழுதும் போது அனைவரும் அறிந்த செய்திகள்தான் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த நூலில் பல விஷயங்கள் புதிதாக உள்ளன. அதனால் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது .

மழுப்பாமல் சில விஷயங்கள் நேரிடையாக சொல்லபடுகிறது. உதாரணமாக கிருஸ்துவ மிஷன்கள் இந்துக்களை மதம் மாற செய்த செயல்கள் பற்றிய விவரம்.

விவேகானந்தர் சென்ற இடங்களை பற்றி வரிசையாக எழுதியது.

அதிக அத்தியாயங்கள் இழுக்காமல் சுருக்கமாக முடித்தது .

குறைகள் :

(குறை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை , ஒரு வாசகனாக சில பரிந்துரைகள்/ ஆசைகள் ) ....

வெறும் வார்த்தைகளாக இல்லாமல் விவேகானந்தரின் மாறுபட்ட படங்களை இடையிடையே போட்டிருக்கலாம் .

ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்திலும் , இறுதியிலும் அவரின் பிரபலமான / முக்கியமான வரிகளை சேர்த்திருக்கலாம் .

துன்பம் அதிகமானதால் தான் அவர் காளியை ஏற்றுகொண்டார் என்பது போல உள்ளது இது சரியா என தெரியவில்லை .

பதிப்பகத்துக்கு :

ஒவ்வொரு நூலிலும் ஆசிரியரை பற்றி , அவர் எழுதிய பிற நூல்களை பற்றி ஒரு பக்கம் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறன் ,

மொத்தத்தில் மாணவர்கள் மட்டுமல்ல அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகம் இல்லை

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-97-5135-166-5.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 .

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

No comments:

Post a Comment