Pages

Showing posts with label Hindu Religion Gods. Show all posts
Showing posts with label Hindu Religion Gods. Show all posts

Wednesday, 24 December 2014

Why Hindu Religion have So Many Gods | இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள் !!

இந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? யார் உங்களின் உண்மை கடவுள் ? சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா ? இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைதான் நீங்கள் வழிபடுவீர்கள்?

உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்னு புராணம் படித்தால் விஷ்னுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.

தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புணிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்னு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தனமையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ?

கீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம்,

இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.

புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.

இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள்.