Pages

Wednesday, 24 December 2014

How to Pray Kula Deivam Temple | குலதெய்வத்தை வழிபடுவது எப்படி ?

கண்டிப்பாக குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வரவேண்டும். அப்படி சென்று வரமுடியாத பட்சத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரிய பணத்தை மணி ஆர்டர் அனுப்பிவிடுவதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர், நட்சத்திரம், ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள். நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.

மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம், மாலை வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கியப் பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.

உங்களது குலதெய்வத்தின் படத்தை வீட்டு பூஜையறையிலும், உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப் பின்னரே செயலில் இறங்க வேண்டும்.

No comments:

Post a Comment